Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபதில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தூர் ஊராட்சியின் தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் எரியோடு- வேடசந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் திடீரென சாலையை கடந்து சென்றுள்ளார். இதனால் அவர் மீது மோதாமல் சோமசுந்தரம் தனது இருசக்கர வாகனத்தை சற்று திருப்பியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சோமசுந்தரம் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சோமசுந்தரத்தை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சோமசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து எரியோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தண்ணீர்பந்தம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |