Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்… பெண்கள் உள்பட 12 பேர் காயம்… தேனியில் கோர விபத்து…!!

தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வேன் கட்டுபாட்டை இழந்து விபத்தடைந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மில்களில் சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் வேன்களில் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல சின்னமனூரில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தேனியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து வேனை சிவநேசன் ஓட்டிய நிலையில் சீலையம்பட்டி பூமார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது.

அப்போது இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக சிவநேசன் வேனை திருப்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து நின்றது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த டிரைவர் சிவநேசன், சின்னமனூரை சேர்ந்த லதா, பிரியா, கன்னியம்மாள், உத்ரா உள்பட வேனில் இருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சின்னமனூர் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |