ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை அன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் மெய்டன் வார்டெக் பெஹஸுட் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் 4 விமான குழுவினரும், 5 ராணுவ பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து வெவ்வேறான கருத்துக்கள் நிலவி வருவதால் இச்சம்பவம் குறித்து கூடுதல் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.