நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மேற்கொள்வதற்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gerard Darmanin கூறியுள்ளார். தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதால் 12 லட்சம் பேர் இதுவரை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டை மீறியதற்காக 1,56,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான காவல்துறையினர் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாலிபர் ஒருவர் உள்ளிருப்பு நடவடிக்கையை நான்கு தடவை மீறியதால் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆறு மாதங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.