நெல்லையில் ஊரடங்கை மீறிய சுமார் 200 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பங்காகக் அரசாங்கம் இரவு நேரத்தில் ஊரடங்கை அமல் படுத்தியது.
இதனை மீறும் நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 200 நபர்களுக்கு தலா 200 வீதம் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.