கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 112.29 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 102.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
அதாவது ஒரு செங்கலின் விலை 13 ரூபாயாகவும், எம் சாண்ட் மணல் 6,500 ரூபாயாகவும், ஆற்றுமணல் 8,000 ரூபாயாகவும், சிமெண்ட் 460 ரூபாயாகவும், ஒரு யூனிட் ஜல்லிகள் 5,500 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் ரூபாய் 9000 வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.