டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது காற்று மாசு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் காற்று மாசு காரணமாக கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வேலையிழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் இதர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.