Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கட்டுமான தொழிலாளர் சங்க பொதுக்கூட்டம்”… கோரிக்கைகள் பல தீர்மானங்களாக நிறைவேற்றம்….!!!!

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பல கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சத்திரம் வீதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று பாரதிய மஸ்தூர் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்  நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு சங்க தலைவர் எம்.கே.முருகானந்தம் தலைமை தாங்க துணைத்தலைவர் டிபி ஹரிஹரன், கட்டுமான பேரவை மாநில பொறுப்பாளர் எம்.சௌந்திரராஜன், மாவட்ட தலைவர் எம்.பிரபு, செயலாளர் எஸ் மாதவன், செயல் தலைவர் செந்தில், துணைத் தலைவர் எம்.சின்னதுரை உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்க துணைத்தலைவர் சச்சிதானந்த கிருஷ்ணன், கைத்தறி மாநில பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் செயற்குழு உறுப்பினர் சிதம்பரசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற செயலாளர் கே.சி சண்முகம் நன்றி உரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர் வாரிய அட்டை வைத்திருப்போர் பணிக்கு பஸ்ஸில் செல்லும் பொழுது இலவச பஸ்பாஸ் வழங்குதல், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ வசதி, வாரிய அட்டை பெற்றுக் கொண்டு கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அரசை கேட்டுக் கொள்ளும்படி பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Categories

Tech |