Categories
மாநில செய்திகள்

கட்டுமான நிறைவுச் சான்றில்லாமல் மின் இணைப்பு அனுமதி – இடைக்கால தடை

கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மின் இணைப்பு பெற கட்டிட பணி முடிப்புச்சான்று கட்டாயம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்று கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வினியோக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |