Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுமான பணியின் போது இறந்த தொழிலாளி…. வீட்டு உரிமையாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லட்சுமிபுரம் சப்தகிரி நகரில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(51) என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீட்டு உரிமையாளர் டேனியல், ஒப்பந்ததாரர்கள் பழனி, வரதராஜன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |