கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தார்கள்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காட்பாடி அருகே இருக்கும் ஓடை பிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக வணிக வளாகம் ஒன்றை கட்டி வருகின்ற நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கட்டிடத்திற்கான சாரம் போடும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்ததால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து காயங்களில் இன்றி தப்பினார்கள்.
ஆனால் நவீன், பிரகாசம், சந்தோஷ், வெங்கடேசன் உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்கள் மட்டும் காயத்துடன் சிக்கிக்கொண்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.