நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதற்கு மத்தியில் விலைவாசி உயர்வதால் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா பரவல் காரணமாக வேலையில்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழிலை மேம்படுத்துவதற்கான கட்டுமான பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.