தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் வளன் அரசு கணக்குகளை ஆய்வு செய்த போது, கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து அக்டோபர் மாதம் பணியை விட்டு சென்ற ராஜபாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரும், முனிராஜ், இனியவன், சண்முகவேல் ஆகியோரும் இணைந்து 84 லட்ச ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விக்னேஸ்வரனிடம் கேட்டபோது அவர் வளன் அரசுவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார். இதுகுறித்து வளன் அரசு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.