Categories
தேசிய செய்திகள்

கணக்கு பாக்காதீங்க மோடி ஜீ …! இன்னும் வேகமாக போங்க…. பிரதமருக்கு பரந்த கடிதம் …!!

கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரசுக்கு எதிராக எத்தனை தடுப்பூசிகள் போட்டு உள்ளோம் ? என கணக்கு பார்க்காமல்,  மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு பேருக்கு தடுப்பூசி போட்டு உள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன எனவும்,  சரியான கொள்கை வடிவம் இருப்பின் இன்னும் சிறப்புடனும்,  விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் எனக் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |