மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லம் என்ற பகுதியில் கணக்கு பாடத்தில் தவறு செய்த மூன்றாம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரத்லம் என்ற பகுதியில் அரசு மகளிர் ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் மாணவி ஒருவரை அழைத்த ஆசிரியர் கணக்கு பாடத்தில் தவறான பதில் அளித்ததால் அந்த சிறுமியை கன்னத்தில் பலமுறை அறைந்து தாக்கியுள்ளார்.
அதன் பிறகு மற்றொரு மாணவியையும் வரவழைத்து கணக்கு பாடத்தில் தவறான பதில் அளித்து காரணத்தால் இதே போல அவரை அடித்தார். இந்நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் துறை ரீதியான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.