Categories
சினிமா தமிழ் சினிமா

“கணம்”… அம்மாவாக நடித்த தருணம்…..நடிகை அமலா பெருமிதம் ….!!!

நடிகை அமலா கணம் படத்தில் தான் அம்மாவாக நடித்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் சர்வானந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “கணம்”. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான ரீத்து வர்மா, சதீஷ், நாசர், அமலா, ரமேஷ் திலக், எஸ்.ஆர்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் தமிழில் “கணம்” என்றும் தெலுங்கில் “ஓகே ஒக ஜீவிதம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

அண்மையில் இப்படத்தின் அம்மா பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாடல் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. இதுகுறித்து நடிகை அமலா கூறியுள்ளதாவது, “மகன்-அம்மா என்ற உறவு மிகவும் புனிதமானது. “கணம்” படத்தில் எனக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். நான் உண்மையாகவே ஒரு தாய்தான் இப்படம் நிறைவடையும் வரை நான் ஒரு தாயாக இருந்திருந்தேன். இதை என்னால் எப்போதும் மறக்க முடியாது” என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |