கணவர் இறந்ததால், மனைவி தர்மதுரை மற்றும் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் மூளை காய்ச்சல் காரணமாக திடீரென்று உயிரிழந்து விட, உறவினர்கள் சொத்துக்காக பிரச்சினை செய்ததால் தனது இரண்டு மகள்களுடன் செல்லமாக வளர்த்த நாயையும் விஷம் கொடுத்து கொன்று, உயிரிழந்துள்ளனர். மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு திடீரென்று மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று தகவல் அறிந்த அவரது மனைவி வளர்மதி, மகள்களான அகிலா, பிரீத்தி ஆகியோருடன் சில மாதங்களுக்கு முன்பே தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அருண் இறந்துவிட்டார். காதல் திருமணம் செய்ததால் உறவினர்கள் வளர்மதியை மரியாதை குறைவாக நடத்தி உள்ளனர். சொத்துக்காக ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று காலை வளர்மதியின் சகோதரி அவரை சந்திக்க வந்துள்ளார். வீட்டில் மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த உள்ளனர். செல்லப் பிராணியான நாய் இறந்து கிடந்தது. அதிர்ந்து போன அவர் காவல்நிலையத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.
விசாரணையில் மூவரும் எழுதிய கடிதம் கிடைத்தது. ஒரே பேப்பரில் மகள்கள் எழுதியுள்ளதாவது: “எங்களுக்கு எங்க அப்பாவை விட்டு இருக்க முடியவில்லை. அதனால் நாங்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகிறோம். ஒத்தக்கடையில் உள்ள இடத்தை விற்று பாட்டியிடம் ஒப்படைக்கவும் என்று கூறியுள்ளனர்”. தாய் வளர்மதி எழுதியதில் “என் கணவர் சம்பாதித்த சொத்துக்களை உரிமை கொண்டாட அவரது குடும்பத்தினருக்கு உரிமை இல்லை. அவரது குடும்பத்தினர் யாரும் எங்களுக்கு இறுதி மரியாதை செய்யக் கூடாது. நகை பணத்தை என் அப்பாவிடம் ஒப்படைக்கவும். என் பெயரில் உள்ள சொத்துக்களை என் தாய்க்கு பத்திரம் எழுதி தரவும்”, என்று ஆத்திரமும், விரக்தியும் சேர்ந்த மனநிலையில் எழுதியுள்ளார்.