கேசவன் – தயா என்ற தம்பதிகள் டெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ரயில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே சென்று கொண்டிருந்த பொழுது கணவர் கேசவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி தயா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தகவல் பேரில் வந்த காவல்துறையினர் ரயிலை நிறுத்தி மதுரா ரயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கி உள்ளனர்.
பின்னர் சிபிஆர் முதலுதவி செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அப்போது மனைவி தயா கேசவன் வாயோடு வாய் வைத்து சிகிச்சை அளித்தார். இதனால் கேசவன் சீராக மூச்சு விட்டார். இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது