சென்னை தண்டையார்பேட்டை வ உ சி நகரை சேர்ந்த மகேஷ் குமார் என்பவர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் திருட சென்றுள்ளார். அப்போது டேபிளில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பிக்க நினைத்தபோது வீட்டில் கணவர் மற்றும் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் படுத்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் திருடன் மகேஷ் குமார் சபலப்பட்டு அந்த பெண் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அதனால் அந்தப் பெண் திடுக்கிட்டு எழுந்து கத்தி கூச்சலிட்டார்.இதனைத் தொடர்ந்து மகேஷ் குமார் அங்கிருந்து தப்பி முயன்ற போது பெண்ணின் கணவரும் அக்கம் பக்கத்தினரும் ஒன்றுகூடி திருடனை அடித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் மகேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆள் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
வீட்டிற்குள் நுழைந்து பணத்தையும் திருடிவிட்டு கணவலுடன் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.