Categories
மாநில செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு கடன்…. அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஐந்து சதவீதம் பட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளை கூட்டுறவு வங்கி அறிவுறுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர்.

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக கூட்டுறவு வங்கிகளில் 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் திட்டம் கடத 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கணவனை இழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு வங்கிகள் 5 சதவீதம் பட்டியில் விரைந்து கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |