மறுமணம் செய்ய மறுத்த பெண்ணை கணவனின் குடும்பத்தினர் மூக்கு மற்றும் நாக்கை வெட்டி கொடுமை படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த குத்தி என்பவர் கோஜே கான் என்பவரை ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில வருடங்களில் கோஜே கான் மரணம் அடைந்ததால் அவரது சகோதரிகள் குத்தியிடம் தங்கள் குடும்பத்திலேயே வேறு நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இது பிடிக்காத குத்தி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோஜே உறவினர்கள் குத்தி வீட்டிற்கு சென்று கூர்மையான ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதோடு அவரது நாக்கு மற்றும் மூக்கை அறுத்து குத்தியின் கையை உடைத்துள்ளனர். இதனையடுத்து குத்தியின் சகோதரர் பஷீர் கான் கோஜே உறவினர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து நவாப் கான், அன்வர் கான் மற்றும் ஜானு கான் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.