Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவனை இழந்த விதவைப் பெண்…. ஆறுதலாக இருந்த காதலன்…. சிறு மாற்றத்தால் நடந்த விபரீதம்….!!

விதவைபெண் ஒருவர் தன் காதலன் தன்னுடன் பேசாததால் தூக்கு மாட்டி  தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி. திருமணமான இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். எனவே புவனேஸ்வரி தன் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது முகநூல் மூலம் காஜா மொய்தீன் என்ற நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கணவனை இழந்து தனிமையில் இருந்து வந்த இதற்கு காஜா மொய்தீன் ஆறுதலாக இருந்து வந்துள்ளார். இந்த நட்பு ஒரு கட்டத்தில் நெருங்கிப் பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இதனால் புவனேஸ்வரி அவரை காதலிக்க தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொய்தீன் இவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். எத்தனை முறை போன் செய்தும் மொய்தீன் எடுக்கவில்லை என்பதால் விரக்தியடைந்த புவனேஸ்வரி கடைசியில், “என்னுடன் பேச மாட்டியா, இதோடு என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்” என்று குறுந்தகவலை அனுப்பி விட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிந்ததை அடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |