கூலி தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொற்கை வரகடை மேட்டுத்தெருவில் கூலி தொழிலாளியான மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கத்தின் மனைவி மின்னல்கொடி ஏன் மது அருந்துகிறீர்கள் என கூறி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மகாலிங்கம் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.