தாய்லாந்தை சேர்ந்த பாத்திமா சாம்னன்(44) என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலக அளவில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளார். அதாவது அந்த விளம்பரத்தில் என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்துக் கொள்ள மூன்று பெண்கள் தேவை அவர்கள் இளமைத்துள்ளும் அழகுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் படித்தவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலக பணிகளில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும்.
மற்றொருவர் வீட்டை சுத்தமாக பராமரிப்பது உடன் என் கணவர் மற்றும் குழந்தைகளின் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குழந்தைகள் இருக்கக் கூடாது என் கணவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு மாதம் கை நிறைய சம்பளம் வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் தங்குமிடம் உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படும். இந்த பணியில் சேருபவர்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டை சச்சரவும் வராது என நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என பதிவிட்டு ஒட்டுமொத்த ஆண் பெண் வர்க்கத்தையே மிரட்சி செய்திருக்கிறார். பதீமாவின் இந்த இந்த தயாள குணம் பற்றி அவரது கணவர் பேசும்போது என்னை நன்றாக கவனித்துக் கொள்ள பெண் தேவை எனவும் என மனைவி என்னிடம் சொன்னபோது நான் முதலில் அதிர்ச்சி அடைந்தேன்.
அதன் பின் தான் அவ்வாறு சொன்னதற்கான காரணத்தை அவர் விளக்கிய போது அதில் உள்ள உண்மை உணர்ந்து கொண்டேன் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த பணிக்கு தேர்வாகும் பெண்கள் எங்க குடும்ப பெண்களைப் போலவே நடத்தப்படுவார் என்னைப் போல் இருக்க விரும்பும் மற்ற ஆண்கள் தங்கள் மனைவிகளும் இது பற்றி தைரியமாக கூற வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் வராது என தெரிவித்துள்ளார் பதீமா சாம்னனின் கணவர்.