Categories
தேசிய செய்திகள்

கணவனை டைவர்ஸ் பண்ணிட்டு… மாமனாருடன் ஓட்டம் பிடித்த மருமகள்… புலம்பித் தவிக்கும் கணவன்….!!!

கணவனை பிரிந்த மனைவி, மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், உள்ள பவுடன் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை காணவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளைஞனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 6 மாதத்திலேயே இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையடுத்து காணாமல் போன தந்தை அந்த இளைஞனின் மனைவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இளைஞன் அளித்த புகாரின் அடிப்படையில் இருதரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், அந்த பெண் தனது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்களை வாழ விடுமாறும் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |