மனைவிக்கு கணவன் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரமா அரோரா என்பவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அருண்குமார்க்கு வரதட்சணையாக பணம் நகை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. இந்நிலையில்வாடகைக்கு வீடு எடுத்து தனியாக அருண்குமார்-ரமா தங்கியிருந்தனர். இந்நிலையில் ரமாவிடம் கணவர் அருண்குமார் தந்தையின் மருத்துவ செலவிற்கு ஒன்றரை லட்சம் வேண்டுமென கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது சகோதரரின் உதவியுடன் பணத்தை ஏற்பாடு செய்துகொடுக்க, அதன் பிறகும் தனக்கு 5 லட்சம் வேண்டுமென்றும் பைக் வேண்டுமென்றும் அருண்குமார் தனது மனைவியைக் கொடுமைப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அருண்குமார் தனது மனைவிக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க சொல்லியுள்ளார். கணவரின் மீது இருந்த நம்பிக்கையில் அமைதியாக வாங்கி குடிக்க மயக்க நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை அருண்குமார் திருடிவிட்டு தலைமுறைவாகியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக ரமா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அருண்குமாரை காவல்துறையினர் விரைந்து தேடி வருகின்றனர்.