மருத்துவமனையில் இருக்கும் கணவனை பார்க்க ஆசையுடன் சென்ற மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை அயனாவரம் செல்லும் சாலையில் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தில் மாநகராட்சி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் அதில் பயணித்து கொண்டிருந்த பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மிஜா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் விபத்தில் சிக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் தனது கணவரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய மாநகராட்சி பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.