Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவனை விட்டுகொடுக்காத மனைவி…. மனைவியை விட்டுகொடுக்காத கணவன்”…. ரசிகர்கள் பாராட்டு…!!!

கணவனை விட்டுகொடுக்காத மனைவி , மனைவியை விட்டுகொடுக்காத கணவன் என்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரசிகர்கள் பாராட்டுகள்.

நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்கள் 2016 ஆம் வருடமே பிரிய போவதாக இருந்தார்களாம். ஆனால் ரஜினி சமாதானம் செய்து வைத்தாராம். அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வந்தாலும் ஐஸ்வர்யாவை தனுஷ் எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை . எங்கு பேசினாலும் ஐஸ்வர்யாவை புகழ்ந்துதான் பேசுவார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அப்பொழுது ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். விருதைப் பெற்ற ரஜினியையும் தனுஷையும்  இணைத்து புகைப்படம் ஒன்றுடன், “பெருமையான மகள், பெருமையான மனைவி” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தன் கணவனை விட்டு பிரியப் போகிறோம் என்று அறிந்தும் அவரை விட்டுக்கொடுக்காமல் பெருமையுடன் போஸ்டை போட்டிருக்கிறார் என ரசிகர்கள் போற்றுகிறார்கள். தனுஷும் எந்த இடத்திலும் ஐஸ்வர்யாவை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

Categories

Tech |