கணவன் இறந்த சோகத்தில் தாய் மற்றும் மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அவருடைய கணவர் திடீரென உயிரிழந்துள்ளார். கணவன் இறந்ததால் திவ்யஸ்ரீ கடுமையான மாணவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து திவ்யஸ்ரீ தனது மகளுடன் சென்னை தாம்பரத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தந்து அத்தை மற்றும் நாத்தனார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவர் இல்லாமல் வாழ பிடிக்கவில்லை என திவ்யஸ்ரீ கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டின் பக்கத்தில் உள்ள கிணற்றில் தன்னுடைய குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு உடல்களையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமை படுத்தியது தான் தன்னுடைய மகளுக்கு தற்கொலைக்கு காரணம் என்று அவருடைய தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இல்லாமல் தாய் மற்றும் மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.