ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பத்மாவதி என்பவர் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அவரின் உருவ சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார். அவரின் கணவர் அங்கிரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகு தனது கணவருக்கு கோவில் கட்டவேண்டும் என்று பத்மாவதி முடிவு செய்தார். அதன்படி கோவிலில் தனது கணவரின் பளிங்கு உருவ சிலையை நிறுவினார்.
கணவனின் பிறந்தநாள், நிறைவு நாள் மட்டும் சிறப்பு நாட்கள் ஆகியவற்றில் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.