வெளிநாட்டில் உள்ள கணவன் செலவுக்கு பணம் அனுப்ப காரணத்தினால் பெற்று குழந்தையை ஒரு தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.
குழந்தை என்பது கடவுள் நமக்கு அளிக்கும் ஒரு வரம். குழந்தை இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். ஆனால் இங்கு பிறந்து 8 மாத ஆன ஒரு குழந்தையை அந்த தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்கின்றது. தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகளை விற்பது, சாக்குப்பையில் கட்டி தூக்கி எறிவது, தகாத உறவால் ஏற்பட்ட குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது.
அப்படி திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவர் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் இலங்கையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். கொரோனா காலத்தினால் கணவரால் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் 8 மாத குழந்தையை அடித்து அதை வீடியோவாக எடுத்து தனது கணவனுக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் கணவன் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கெஞ்சியும் அதைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் கேட்காததால் அந்தப் பெண்ணின் தம்பி இந்த வீடியோவை மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது கணவன் பணம் வந்தால் மன உளைச்சலுக்கு ஆளான தால் இவ்வாறு செய்ததாக அந்த பெண் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அப் பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி சிறுவர் பிரிவில் அனுமதித்தனர் .மேலும் அப்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.