ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற சகோதரி உள்ளார். இந்நிலையில் ஈஸ்வரியின் மகள் சபரி நாயகிக்கும் உடுமலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு சஞ்சனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயனுக்கும், சபரி நாயகிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று முன்தினம் கார்த்திகேயன் தனது மகளை பார்ப்பதற்காக சென்ற போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஈஸ்வரன் அதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஈஸ்வரனை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஈஸ்வரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.