Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை… மனவேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

ஆலங்குளத்தில் கணவன் -மனைவி பிரச்சனையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குறிஞ்சி நகரை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் இவரது மனைவி 36 வயதுடைய கற்பகவல்லி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுப்ரமணியன் தையல் தொழில் செய்து வந்துள்ளார். சுப்ரமணியதிற்கும் ,அவர் மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக மனவேதனை அடைந்த அவரது மனைவி, நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அதனை பார்த்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரைக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Categories

Tech |