Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு”… மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை…!!!

ஆவடியில் கணவன் மனைவியை தகராறில் மனைவி தீக்குளித்து இறந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி சந்தியா. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. சென்ற 6ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நந்தகுமார் மனைவியே சந்தியாவை அழைத்து இருக்கின்றார். ஆனால் சந்தியா மறுக்க கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் சந்தியா மனமுடைந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார்.

உடல்  எரிவதால் வலி தாங்க முடியாமல் கதறியதால் அருகில் இருந்த நந்தகுமார் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஆவடி போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |