கணவன் மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க கணவன் மனைவி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை. சில ஆலோசனைகள்.
குடும்ப உறவுகளில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாகும் பொழுது தான், நம்முடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிறது. இதனால் தான் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் வீடு ஆபீஸ் குழந்தை அப்படி என்று எல்லாவற்றையும் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.
ஏதாவது ஒரு இடத்தில் நம் மனதில் ஏற்படும் சின்னச் சின்ன சங்கடங்கள், வாழ்க்கையை வெறுக்கும் சூழ்நிலையை நிறைய பேருக்கு உருவாக்கிவிடுகிறது. வெறுக்கும் அளவிற்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு போராட்டம் கிடையாது. அதை சரியாக நாம் அணுகுவதில்லை, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் நமக்கு கையால தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறைதான். அந்த வாழ்க்கை உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள்தான் மாற்றிக்கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் ரசித்து வாழ்வதற்கு நான் சொல்லும் சில ஆலோசனைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆடை அணிவதில் முக்கியத்துவம்:
முதலில் நீங்கள் எப்படி டிரஸ் பண்றீங்க அப்படிங்கறது ரொம்ப முக்கியம். நிறைய பேர் டிரஸ்சுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பதில்லை. என்னதான் நீங்க ரொம்ப நல்லவர்களாக இருந்தாலும் உங்களுடைய வெளித்தோற்றம் தான் மற்றவர்களுக்கு உங்களுடைய ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொடுக்கும்.
எனக்கு கல்யாணம் ஆகி விட்டது, நான் அம்மாவாகி விட்டேன் இனி நான் நீட்டா ட்ரஸ் பண்ணிக்கொண்டு என்ன செய்யப் போகிறேன், ஏனோ தானோ என்று இருக்காதீர்கள். எப்பொழுதுமே உங்களை நீங்கள் ஒரு பாகமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு பாகமாக இருப்பதற்கு உங்களின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய டிரஸ் நான் ஒரு நல்ல மதிப்பை கொடுக்கும்.
அன்பான பேச்சு :
கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். உங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துவீர்கள் என்பது ரொம்ப முக்கியம். வெளியில் எல்லோரிடமும் சிரித்து பேசிக்கொண்டு, வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளிடமும் வில்லன் மாதிரி நடந்து கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.
உணர்வுகளின் மதிப்பு:
ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான உணர்வு இந்த வேலை எல்லாம் அவர்களுடைய பொறுப்பு, இது அவங்க தான் செய்யணும், இதனால் நான் தொடக்கூட மாட்டேன். அப்படின்னு நினைச்சு நீங்க விலகாதீர்கள். வீட்டில் இருக்க கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட உங்கள் வீட்டில் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமுமில்லை.
பகிர்தல் என்றால் வேலையை மட்டும்தான் பகிர வேண்டும் என்பதில்லை, வார்த்தைகளை பகிர்வது ரொம்ப ரொம்ப முக்கியம். உங்களுடைய எண்ணங்களையும், சந்தோசத்தையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக் கொள்ளாததால் தான், நிறைய வீடுகளில் பிரச்சனைகள் ஆரம்பமாகிவிடுகிறது.
பகிர்தல் அவசியம்:
திருமணம் முடிந்து சில ஆண்டுகள் சந்தோசமாக இருப்பார்கள். அந்த நேரத்தில் பொறுப்புகள் இருக்காது, குழந்தைகள் பிறந்ததும் பொறுப்புகள் அதிகம் ஆகி விடுகிறது. இதனால் வாழ்க்கையை வெறுக்கும் சூழல் ஏற்படுகிறது. குழந்தை விஷயத்தில் சிக்கல்கள் வருவதற்கு முதல் காரணமே குழந்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று, ஒருவரின் மீது எல்லா பொறுப்புகளையும் திணிப்பதில் இருந்து தான் ஆரம்பமாகிறது.
குழந்தையை காப்பது:
அதேபோல் குழந்தை எப்பொழுதுமே நீங்கள் நினைத்த மாதிரி இல்லை அல்லது நீங்கள் சொல்ற மாதிரி நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். சில நேரம் குழந்தைகள் எதிர்த்து பேசும் பொழுதும் சொல் பேச்சு கேட்காத போதும், உங்களுக்கு அதிகமாக டென்சன் ஆகும். குழந்தைகளுடைய உலகத்தை நீங்கள் ஹேண்டில் பண்றது கொஞ்சம் கஷ்ட்டமாகத்தான் தான் இருக்கும்.
அந்தந்த ஸ்டேஜ்ல அவங்க செய்ய வேண்டியது கட்டாயம் என நினைக்காதீர்கள் .அதே நேரம் என் குழந்தை எதிலேயும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதே கைவிடுங்கள். இதுவும் ஒருவித மனஅழுத்தம் தான். வெற்றி மட்டுமே கிடைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று உங்களுடைய எண்ணம் தான் அவர்களுடைய தோல்விக்கும் வழிவகுக்கும்.
தோல்வியை தாங்கும் மன வலிமையும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். பிரதிபலன் எதிர்பாராது அன்பு கிடைக்கும் ஒரே இடம் நம் குடும்பமாக தான் இருக்க முடியும்.
ரசிக்க வைக்கும் காதல்:
காதல் காலம் கனிந்த பின் மாறிவிடுகிறது என்று சொல்வதற்கு இந்த அன்பு குறைவுதான் காரணம். காதலிக்கும் பொழுது நல்லா இருந்துச்சு, இதுவே திருமணத்திற்கு பின்னாடி கசப்பாக மாறிவிடுகிறது அப்படி என்று சொல்வதற்கு இந்த அன்பு குறைவுதான் காரணம்.
திருமணமாகி விட்டது, குழந்தை பிறந்து விட்டது இனி என்ன காதல் அப்படி என்று சொல்லியே நிறைய பேர் வாழ்க்கையை ரசிக்காமல் கடினமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய காதலை, உங்களுடைய அன்பை நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் காட்டும் அக்கறையில் வெளிப்படுத்துங்கள்.
அன்பை செயல்களில் காட்டுங்கள், விவாதங்கள் வேண்டாம்:
வார்த்தைகளில் சொல்வதை விட உங்களுக்கு அவர்களின் மேல் அன்பை செயல்களில் வெளிப்படுத்துங்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு சாதாரணமான விஷயம்தான். தானாக ஒரு பக்கம் பிரச்சனைகள் வருகிறது என்றால் நாமே பேசி வளர்த்துக்கொள்வது இன்னொரு பக்கம்.
இதை பேசுவதனால் தான் இந்த பிரச்சனை வருகிறது என்று ஒத்துக் கொள்வதற்கு யாருமே தயாராக இருப்பதில்லை. இது படிப்படியாக வளர்ந்து ஈகோவாக மாறிவிடுகிறது.கணவன்-மனைவிக்குள் எதற்கு இந்த தயக்கம். இதை தடுப்பதற்கு சில விஷயங்களை பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது.
ஒரு குடும்ப உறவு நல்லாஇருப்பதற்கு ஆணிவேராக இருப்பது நம்முடைய பேச்சு தான். இந்த பேச்சு நாகரீகமாக இல்லாமல், அன்பு நிறைந்ததாக இல்லாமல், இருந்தால் குடும்ப உறவுகளில் கண்டிப்பாக விரிசல் விழும்.
விவாதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க முடியும். போட்டிக்கு போட்டியாக செஞ்சா நான் இதைச் செய்வேன், நீ என்ன கஷ்டப் படுத்தும் பொழுது எப்படி வலித்திருக்கும், அந்த வழி என்ன என்று உனக்கு தெரியும், அப்படி நினைக்கிறது முட்டாள்தனம். கணவன் மனைவிக்குள்ள இது இருக்கவே கூடாது.
மன்னிக்கும் குணம்:
மன்னிக்கும் குணம் இருக்க வேண்டும். உங்களுடைய கணவனாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, உங்களுடைய துணையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஏதாவது ஒரு தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். மனிதனாக பிறந்த எல்லோருமே தவறு செய்வது சகஜம் தான். தவறு செய்யும் பட்சத்தில் அதையே குத்தி குத்தி காட்டாமல் அவர்களை மன்னித்து அவர்களை திருத்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
எனக்கு பிடிக்காத விஷயத்தை அவள் செய்து விட்டாள், என்கிட்ட பொய் சொல்லிவிட்டாள் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களைப் பற்றிய தப்பான எண்ணங்களை உங்களின் மனதிற்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள். இது உங்களுடைய குழந்தை மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்து கொண்டாலே, திருமண வாழ்க்கையில் கசப்பு, வெறுப்பு இந்த பேச்சுக்கே இடமில்லை.