துணி தைக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் செதுஊர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இந்தத் தொழில் சரியாக நடக்காததால் இவர் மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தர்மலிங்கம் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.