குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவனுக்காக மனைவி செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதிகள் விவேக் ஜெயின் – நீது ஜெயின். இதில் விவேக் ஜெயின் என்பவர் நாக்பூரில் மதுபான கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கல்லலீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விவேக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வதற்காக மும்பை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு கல்லீரல் தானம் செய்ய ஒருவரும் முன்வரவில்லை.
இதனால் அவரது மனைவியே கல்லீரல் தானம் செய்வதாக முடிவெடுத்துள்ளார். இதற்கு மருத்துவமனையும் சம்மதம் தெரிவித்தநிலையில் மேலும் ஒரு புது பிரச்சனை வந்துள்ளது. அதாவது நீதுவின் எடை அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யவதில் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் நீது மருத்துவமனையில் தினமும் 12 மாடி ஏறி இறங்கியும், உணவுவகைகளில் கட்டுக்கோப்பாக இருந்தும், 10 கிலோ வரை எடையை குறைந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீத்துவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து விவேக்கிற்கு வைத்துள்ளனர். இதுகுறித்து விவேக் ஜெயின் கூறுகையில் ” நான் உயிருடன் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம். இது எனக்கு மறுபிறவி. இந்த புது வாழ்க்கையை நான் மகிழ்ச்சியுடன் வாழ்வேன்” என்று கூறியுள்ளார்.