ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தில் தங்கராஜ் மற்றும் பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தங்கராஜ் செல்போன் உபரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தங்கராஜ் தூங்கச் சென்றார். கணவனின் செயலால் மன உளைச்சலில் இருந்த பிரியா தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜின் பிறப்புறுப்பில் வெந்நீர் ஊற்றியுள்ளார். பலியால் துடித்த அவர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரின் உடம்பில் 50 சதவீதம் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரியா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.