Categories
தேசிய செய்திகள்

கணவன் வீட்டுக்கு செல்ல மறுத்த மகள்…. ஆத்திரத்தில் தந்தை செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் முடிந்து 20 நாட்களில் கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாகப் பேசிய தாயையும்,தந்தை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 8ஆம் தேதி திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சரஸ்வதி என்ற பெண் சென்றுள்ளார். அதன் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

அதன் பிறகு தந்தை கிருஷ்ணப்பா தனது மகளிடம் எவ்வளவோ சமாதானம் பேசியும் சரஸ்வதி கேட்கவில்லை. மகளுக்கு ஆதரவாக தாய் கமலாவும் பேசி வந்ததால் கிருஷ்ணப்பா கடும் கோபத்திலிருந்துள்ளார். இதை எடுத்து இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த அவர் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மகளை கட்டையால் கடுமையாக தாக்கி அதன் பிறகு இறந்து விட்டதாக கூறி அவரும் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் மகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். விஷம் குடித்த கிருஷ்ணாப்பாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |