Categories
தேசிய செய்திகள்

கணவராக இருந்தாலும்…. கட்டாயப்படுத்தினால் பாலியல் வன்கொடுமை தான்…. அதிரடி தீர்ப்பு…!!!!

கணவனுக்கு எதிராக மனைவி தொடர்ந்த பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கணவன்-மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவதும் வழக்கமாகியுள்ளது. இதுகுறித்து பெண்கள் வழக்கு தொடர்ந்தால் இந்திய தண்டனைச் சட்டத்தில் இருக்கும் சிறப்பு திட்டங்கள் மூலம் ஆண்கள் தப்பித்துக் கொள்கின்றனர். அதாவது கணவர்-மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது மனைவியின் வயது 15-க்கு மேல் இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படமாட்டாது என்பது ஆகும்.

இந்த சட்டத்தினால் தான் கணவன்மார்கள் கட்டாய பாலியல் உறவுக்கு வற்புறுத்துகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கணவன் தன்னை இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாக கீழடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணின் கணவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவர் ஆணாக இருந்தாலும், கணவராக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தான் என்று தீர்ப்பளித்தார். மேலும் பெண்களிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கு எந்தவித சிறப்பு சலுகைகளும் திருமண அமைப்பு வழங்கவில்லை, இனியும் வழங்காது எனவும் தீர்ப்பளித்தார்.

Categories

Tech |