தன் மனைவி ஒப்புக் கொள்ளாததால் கணவர் செய்த காரியம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஒரு ஆண் தன் தொப்பையில் பூக்கள், நீல நிற பாவாடை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் என் மனைவி கர்ப்ப காலத்தில் போட்டோ சூட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போட்டோ சூட் எடுக்க கணவர் ஏற்கனவே பணம் கொடுத்து விட்டதால், அவரே போட்டோசூட் எடுத்துக்கொண்டார் என்று கூறி பல்வேறு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்ற உண்மை வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் நண்பர்களுடன் சேர்ந்து கிண்டலாக அவ்வாறு எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி அந்தப் புகைப்படங்களில் எதுவும் உண்மை இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த புகைப்படங்கள் அனைத்தும் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவ…