கணவனின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீர் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்(32), பிரியா(30) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பிரியா கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்தார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவருக்கு சரியான பாடம் புகட்ட நினைத்த பிரியா கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை தூக்கி வந்து கணவனின் ஆடைகளை விலக்கி விட்டு அவரது ஆண் உறுப்பில் ஊற்றினார். இதனால் தங்கராஜ் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வாலிபரின் மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.