பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் சுமதி முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. இதனால் மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு எனது கணவர் உள்ளிட்ட சிலர்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.