ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பின்ச்சின் ஆட்டம் சரியில்லாத காரணத்தினால் அவரது மனைவிக்கு ரசிகர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி கடந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடியது. ஆனால் தற்போது நடைபெற்ற 2டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் என அவரது ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பின்ச் முதல் போட்டியில் 1 ரன்னும் இரண்டாவது போட்டியில் 12 ரன்னும் அடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் இவரது கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் பற்றி பலர் விமர்சித்து வருகின்றனர். தற்போது அவரது மனைவிக்கு ரசிகர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரது மனைவி ஏமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” சமூக வலைதளங்களில் போர்க்கொடி ஏந்துபவர்கள் அவர்களின் நிஜ வாழ்க்கையில் முதலில் எவ்வாறு இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட மோசமான செயல்களில் ஈடுபடுவோர் தங்களை ரசிகர் என்று கூறிக் கொள்ளாதீர்கள்.” என மிகவும் கடுமையான வார்த்தைகளால் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ரசிகர்கள் இவ்வாறு கூறுவதை நிறுத்த வேண்டும். எப்போதும் எல்லோராலும் சிறப்பாக செயல்பட முடியாது. இப்போது அவருக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலை மாறும்.” எனவும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.