கள்ளக்காதலனுடன் ஓடிய இளம் பெண்ணை காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பட்டன்விளை பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளி தனது மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தொழிலாளி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும் தொழிலாளியின் நண்பர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது தெரியவந்துள்ளது.
அதன்பின் இருவரின் செல்போன் சிக்னலையும் கண்காணித்த காவல்துறையினர் கோவையில் கள்ளக்காதலனுடன் தங்கியிருந்த இளம்பெண்ணை மீட்டனர். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு இளம்பெண்ணின் கணவரையும், பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இளம்பெண்ணை ஏற்றுக்கொள்ள தொழிலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் அறிவுரை கூறி இளம்பெண்ணை அவரது பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.