Categories
உலக செய்திகள்

கணவரின் பிரிவால் வாடிய மகாராணி…. இறுதி வரை துயரத்தில் மீளவில்லை…. வெளியான தகவல்….!!!

இளவரசர் பிலிப் காலமான பின்னர் மனம் உடைந்தே காணப்பட்ட மகாராணியார், அதிலிருந்து இறுதி வரையில் மீளவே இல்லை என ராஜகுடும்பத்து பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இளவரசர் பிலிப் காலமான பின்னர், மகாராணியார் 2-ம் எலிசபெத் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதாகவும், அவர் எப்போதும் போல இல்லை என்றே அரண்மனை வட்டாரத்திலும் கூறப்படுகின்றது. மேலும், மகாராணியாரின் பலமும் கேடயமும் இளவரசர் பிலிப் தான் என கூறுகின்றார். மகாராணியார் தொடர்பில் புத்தகம் ஒன்றை வெளியிடவிருக்கும் ஆசிரியர் ஒருவர்  கூறியதாவது, “இளவரசர் பிலிப் காலமான பின்னர் மகாராணியார் வெகுவாக மாறிவிட்டார் எனக் கூறும் அவர், மகாராணியார் வாழ்க்கையில் முன்னெடுத்த எல்லாவற்றிலும் இளவரசர் பிலிப் அவரை ஆதரித்தார். மேலும், இளவரசர் பிலிப்பின் ஆதரவு இல்லாமல், இத்தனை ஆண்டு காலம் மகாராணியாராக பொறுப்பில் இருந்திருக்க முடியாது.

இந்நிலையில், மகாராணியாரின் உடல் அவரது பெற்றோர் மற்றும் இளவரசர் பிலிப்பின் உடலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, தற்போது பெயர்ப்பலகையும் வெளியிடப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மகாராணியாரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சிற்றாலயமானது பொதுமக்கள் பார்வைக்காக அடுத்த வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளது. பெரியவர்களுக்கு 28.50 பவுண்டுகள் கட்டணமும் சிறார்களுக்கு 15.50 பவுண்டுகள் கட்டணமும் வசூலிக்கயுள்ளனர். மேலும் இதிலிருந்து வசூலிக்கப்படும் தொகையானது ராஜகுடும்பத்து பொக்கிஷங்களை பராமரிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

Categories

Tech |