தேர்தலில் பெற்ற வெற்றி சான்றிதழை கணவனின் சமாதியில் வைத்து அவரது மனைவி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் நகராட்சி பகுதியின் 188-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க பெண் வேட்பாளர் சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவர் 2,945 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் செல்வம் தி.மு.க வின் வட்டச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.
இவரை கடந்த 1-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இவருடைய மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் தான் பெற்ற வெற்றி சான்றிதழை தன்னுடைய கணவரின் சமாதிக்கு எடுத்துச்சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.