Categories
தேசிய செய்திகள்

கணவரின் வீடியோ கொடுத்த அதிர்ச்சி …. “நீ செத்து விடு” மனைவி எடுத்த முடிவு …!!!

கள்ளக் காதலியுடன் தன் கணவர் தனிமையில் இருந்த வீடியோவை பார்த்த மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிக்கிமில் வசிக்கும் தம்பதியினர் ரஞ்சிதா(23)-அருண்குமார்(30). இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அருண் குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு இருந்து வந்ததால் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அருண்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரின் செல்போனில், அவருடைய கள்ளக் காதலியுடன் உல்லாசம் அனுபவித்த வீடியோவை எதிர்பாராதவிதமாக பார்த்த ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே இதுகுறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் ரஞ்சிதாவிடம் “நீ செத்து விடு” என்று கூறியதால் மனமுடைந்த ரஞ்சிதா தனது சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் தனது வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறைக்கு பயந்த அருண்குமார் மதுவில் விஷத்தை கலந்து குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |