துனிசியாவில் கொல்லப்பட்ட தன் கணவருக்காக பாதுகாப்பு படையினரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய பெண், தன் குழந்தையுடன் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா என்ற நாட்டில் ஜிகாதிகள் பதுங்கியுள்ள இடமான Mount Selloum என்ற பகுதியில் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினர் தன் கணவனை கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் மனித வெடிகுண்டாக மாறியிருக்கிறார். அதாவது இப்பெண்ணின் கணவர் பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தியபோது கொல்லப்பட்டிருக்கிறார்.
மேலும் அந்தப் பெண் பாதுகாப்பு படைகள் தன் அருகில் நெருங்கும் சமயத்தில் தன் குழந்தையை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை அமிழ்த்தியுள்ளார். வெடிகுண்டு வெடித்ததில் அந்தப் பெண் மற்றும் குழந்தை உடல் சிதறி உயிரிழந்தனர். அப்போது அங்கு நின்ற ஒரு சிறுமியும் படுகாயமடைந்துள்ளார்.