Categories
உலக செய்திகள்

கணவருக்கு இறுதி சடங்கு செய்த பெண்… 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவர்…!!!

தன் கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி இறுதி சடங்கு செய்த பிறகு கணவர் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டில் எல் கார்மின் என்ற பகுதியில் ஜூலியோ மற்றும் விக்டோரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அவர் தான் வசித்த பகுதி அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், ஜூலியோக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை.

அதன் பிறகு இரவு நேரம் ஆகியும் தனது கணவர் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த மனைவி விக்டோரியா உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி அங்குள்ள மருத்துவமனையில் இருந்து விக்டோரியாவுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் கொரோனா தாக்குதலால் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர் உங்களது கணவர் ஆக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரை அடையாளம் காண நீங்கள் வரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் விக்டோரியாவிடம் கூறியுள்ளது. இதனையடுத்து விக்டோரியா மருத்துவமனைக்கு வரும் போது தனது கணவரின் அடையாள சான்றிதழை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த விக்டோரியா தனது கணவரின் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்றார்.

அங்கு பிணவறையில் இருந்த உயிரிழந்த முதியவரின் உடலை மருத்துவ ஊழியர்கள் காண்பித்து இது உங்கள் கணவரா என்று அடையாளம் காட்டுங்கள் என கூறியுள்ளனர். அந்த உடலை பார்த்து அது தன் கணவர் தான் என விக்டோரியா கூறியுள்ளார். அதன்பிறகு அந்த உடலை விக்டோரியா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு விரைந்து தனது சொந்த ஊரில் அடக்கம் செய்தார். அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து ஜனவரி 3ஆம் தேதி ஜூலியோ வீட்டிற்கு முன் கார் ஒன்று தனது வீட்டின் முன் நிற்பதை கவனித்த விக்டோரியா வெளியே வந்தார்.

அங்கு உயிரிழந்ததாக நினைத்து அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த தனது கணவர் ஜூலியோ உயிருடன் இருந்ததை கண்டு விக்டோரியா அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு நடந்த விவகாரத்தில் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த தகவலை அடுத்து, விக்டோரியா உண்மை நிலையை புரிந்து கொண்டார். மேலும் தனது கணவரை கண்ணீர்மல்க வரவேற்றார். கணவர் இறந்து விட்டார் என வேறு நபரை அடக்கம் செய்த பின்னர் உண்மையான கணவர் உயிருடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |